கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்தும் அன்னூர் அரசு பேருந்து பணிமனை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் 45 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 38 பேர் அன்னூர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அதே நேரத்தில் நிகழ்ந்த மற்றுமொரு சாலை விபத்தால் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.