மத்திய மாநில அரசுகளை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் பொதுக்கூட்டம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு திட்டங்களை எதிர்த்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுமுறையை ரத்து செய்யவேண்டியும், நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்களைக் கண்டித்தும் ஞாயிற்றுகிழமை மாலை உக்கடம் வின்செண்ட் சாலையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, நீட் தேர்வுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.



மேலும் நவோதய பள்ளிகள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, அரசு பள்ளிகளே போதும்', என்றும் கூறினார்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...