தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை சராசரி அளவிலேயே பெய்யும் - வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்

நடப்பு ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான தகவல்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து பெறப்பட்டன. தகவல்கள் கிடைக்க இயலாத இடங்களுக்கு, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் கணினி கட்டமைப்பில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2017ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீத வாய்ப்பாக எதிர்பார்க்கப்படும் மழையளவு விவரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு 84 சதவீத மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் 27 மாவட்டங்கள் பின்வருமாறு : சென்னை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், அரியலூர், கரூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரி மழை அளவை விடக் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் 5 மாவட்டங்கள்: காஞ்சிபுரம் (20 சதவீதம் குறையும்), விழுப்புரம் (21 சதவீதம் குறையும்), பெரம்பலூர் (24 சதவீதம்), தூத்துக்குடி (25 சதவீதம்), விருதுநகர் (22 சதவீதம்).

சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். சராசரியைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாசன நீர் அளவைப் பொருத்து பயிர் சாகுபடி செய்யலாம். மேலும் பெறப்படும் மழையை தகுந்த நீர் சேகரிப்பு மேலாண்மையைக் கையாண்டு பயன் பெறலாம் என்று பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...