தமிழ்நாட்டில் 2017-ம் வருடத்திற்கான வடகிழக்குப் பருவ மழை முன்னறிவிப்பு

எதிர்வரக்கூடிய 2017ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழைமனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது. இதற்கான தகவல்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து பெறப்பட்டன.

தகவல்கள் கிடைக்க இயலாத இடங்களுக்கு, மழைமனிதன் கணினி கட்டமைப்பில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2017ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகித வாய்ப்பாக எதிர்பார்க்கப்படும் மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு எண்பத்தி நான்கு சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் 27 மாவட்டங்கள்- சென்னை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், அரியலூர், கரூர், நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரி மழையளவை விட குறைவான மழை எதிர்பார்க்கப்படும் 5 மாவட்டங்கள்- காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர்.

சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம்.

சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாசனநீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம். மேலும், பெறப்படும் மழையை தகுந்த நீர் சேகரிப்பு மேலாண்மையைக் கையாண்டு பயன் பெறவும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...