இரண்டாம் கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 537 வீடுகள் காவல்துறையினர் உதவியுடன் கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று அகற்றப்பட்டன. இதில் அணைமேடு I – 71 வீடுகள், அணைமேடு II – 276 வீடுகள், துர்கா காலனியில் 7 வீடுகள், அண்ணா காலனியில் 56 வீடுகள், முத்து காலனியில் 64 வீடுகள், சேரன் நகரில் 53 வீடுகள் அகற்றப்பட்டன. 



அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்களை வெள்ளலூர் பகுதியில் குடியேற்றம் செய்து இன்று (செப்டம்பர் 21) காலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை துவங்கினர்.

இரண்டாம் கட்டமாக துவங்கப்பட்டுள்ள இப்பணி தொடர்ந்து நாளையும் நடைபெறும் என்றும் இதில், வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதில், ஆக்கிரமிப்பு நிலங்களான நஞ்சுண்டாபுரம் இட்டேரி - 280 வீடுகள், வெள்ளலூர் ராஜவாய்க்கால் - 39 வீடுகள், ஆத்துமேடு நஞ்சுண்டாபுரம் - 66 வீடுகள், அண்ணாநகர் பீளமேடு - 219 வீடுகள், குளத்து ஏரி அண்ணன் அண்ணாநகர் - 32 வீடுகள், அண்ணாநகர் ஒண்டிபுதூர் - 66 வீடுகள், கோத்தாரி லே-அவுட் - 30 வீடுகள், ஆட்டோ டிரைவர் காலனி - 121 வீடுகள் என மொத்தம் 853 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவுள்ளனர்.

இதனிடையே, கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து அங்குள்ள மக்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.



முன்னதாக, கோவையில் நீர்நிலைகள் அழிந்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...