மழைக்கால தொற்றுநோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் மூலம் மேற்கொள்ளப்படும் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் தொற்று நோய் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் வேண்டும்.

அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலைமேம்பாட்டுப் பணிகளின் நிலை, உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள், கல்வித்துறையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது, பள்ளிகளில் நடைபெற்றுவரும் கட்டுமான வசதிகள், குறித்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தல் முற்றிலும் ஒழித்திட பொதுமக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.



தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அதன் தற்போதைய நிலைகுறித்து மாவட்ட ஆட்சியர் வாயிலாக உடனடியாக அறிக்கை தெரிவிக்க வேணடும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக எந்த வித சிரமமும் இன்றி உரிய நேரத்தில் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலருமான ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...