அக்.,2-ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கப் பணிகள் நடக்கும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று (20.09.2017) தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார். 

அப்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவாது, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 15.09.2017 முதல் 02.10.2017 (காந்தி ஜெயந்தி) வரையில் நடைபெறவுள்ளது. இத்தூய்மை பணியானது ஊரக மற்றும் நகர்புற  பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், உதகை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...