ஜனநாயக ரீதியான தங்களின் போராட்டம் தொடரும் - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி அறிவிப்பு


மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23-ம் தேதி சென்னை மெரினாவில், இலங்கையில் கடந்த 2009 -ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. 

இதனால், காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில்,  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நேற்று (செப்.,19) உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரையும் மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் திருமுருகன் பேசுகையில், ஜனநாயக ரீதியான தங்களின் போராட்டத்தை தொடரும் என்று உறுதி கூறுகிறோம். தமிழர்கள் மீது இந்திய அரசு யுத்தம் மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் போராட்டம் நடத்துவோம். தமிழினத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தை மே17 இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி மேற்கொள்ளும். மத்திய அரசின் கைப்பாவையாகவும், செயல்படாத அரசாகவும் தமிழக அரசு உள்ளது. தற்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...