110-வது பிரதேச ராணுவப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 23-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் நடக்கும் இந்த ஆட்சேர்ப்பு முகாமின் மூலம் மொத்தம் காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொதுப்பிரிவில் 8 காலிப் பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 3 காலிப் பணியிடங்களும் உள்ளன.
தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கிச்சுடும் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பிரதேச ராணுவப்படையில் சேர விரும்பும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தோர், ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 18 முதல் 42 வயது வரையுடைவர்கள் தகுதியானவர்கள்.
மேலும், பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர் தங்களுடைய 10 புகைப்படங்கள், அடுத்த பயனாளியுடைய (nominee) 5 புகைப்படங்களை கொண்டு வரவேண்டும்.
தொடர்ந்து, ஆதார் கார்டு ( குடும்பத்தினருடையதும் சேர்த்து), பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றுகளின் அசலை எடுத்து வர வேண்டும். விண்ணப்பிபோர் திருமணமாயிருப்பின், தனது மனைவியி மதிப்பெண் சான்று, குழந்தை பிறப்புச் சான்று மற்றும் கூட்டு வங்கிக் கணக்கு போன்ற விவரங்களின் அசலை சமர்பிக்க வேண்டும்.
பொதுப்பிரிவுக் காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். துப்புறவு பணியாளருக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமுள்ளவர்களுககு முன்னுரிமை அளிக்கப்படும்.
உயரம் 160 செ.மீ-க்கு அதிகமாக இருக்க வேண்டும். மார்பின் அளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் மார்பு 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர், முகாமில் நடத்தப்படும் அனைத்து மருத்துவப் பரிசோதனையில் கட்டாயம் தகுதி பெற வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.