கலை பண்பாட்டுத் துறையின் நான்கு மாவட்டங்களுக்கான மண்டல மையம் கோவையில் துவக்கம்- மண்டல உதவி இயக்குநர்

கலை பண்பாட்டுத் துறையின் நான்கு மாவட்டங்களுக்கான மண்டல மையம் கோவையில் செயல்பட தொடங்குகிறது என மண்டல உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கலைக்கல்வியை மேம்படுத்தவும், தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலைஞர்கள் மேம்பாட்டிற்காகவும் கலை பண்பாட்டுத்துறை எனும் ஒரு துறையை 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 6 கலை பண்பாட்டு மண்டல மையங்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம், நான்கு அரசு இசைக்கல்லூரிகள், மூன்று ஓவியம் மற்றும் சிற்பக்கல்லூரிகள், 17 மாவட்ட இசைப்பள்ளிகள், 30 மாவட்டங்களில் ஜவகர் சிறுவர் மன்றங்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள் வாரியம் மற்றும் ஓவிய நுண்கலைக்குழு ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டங்களில் நடைபெறும் கலை பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட மண்டல கலை பண்பாட்டு மையங்கள் 6 மண்டலங்கள் இருந்த நிலையில் கொங்கு பகுதிக்கென கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை 8 மாவட்டங்களுக்கான மையமாக சேலம் கலை பண்பாட்டு மையம் செயல்பட்டு வந்தது. தமிழக முன்னாள் முதலமைச்சர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் 110 விதியின் கீழ் சேலம் மண்டலத்தை இரண்டாக பிரித்து கோவையில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்படும் என அறிவித்தார்.

இவ்வறிவிப்பின் படி பணிகள் தொடங்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மையமாக கலை பண்பாட்டுத்துறையின் ஏழாவது மண்டலமாக கோவை கலை பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையம் மலுமிச்சம்பட்டியில் செட்டிபாளையம் பிரிவு சாலையில் செயல்படும் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கலைக்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளுடன் கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெறுதல், கலை விருதுகள் அளித்தல், நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை, வாரிய உறுப்பினர் புதுப்பித்தல், நல உதவிகள் வழங்குதல், இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பரிந்துரை, மாநில அரசின் விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டத்திற்கான விண்ணப்பம் பரிந்துரை மற்றும் சிறந்த கலை அமைப்புகள் கலை சேவைக்கான நோக்கிற்காக மத்திய மாநில அரசின் நிதியுதவிக்காக விண்ணப்பிக்கும் நேர்வில் அதனை ஆய்வு செய்து பரிந்துரைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0422-2610290 தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...