அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா பிறப்பித்திருக்கும் உத்தரவில், அரசு ஊழியர்கள், அலுவலத்தில் பணியின் போது தங்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
பணியாளர் அல்லது ஊழியர் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும். இதற்கேற்றார் போல அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.