கண்ணாடி கருவிகள் தயாரிப்பு இலவச பயிற்சி - ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையை சேர்ந்த அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடி கருவிகள் தயாரிப்பதில் 2 மாதம் மற்றும்  11 மாதம் திறன் மேம்பாடு பயிற்சி படிப்புகளை துவங்க உள்ளது. இப்பயிற்சி நிலையம் அவினாசி சாலை சிட்ரா அருகில் மண்டல சோதனை ஆய்வுக் கூட வளாகத்தில் உள்ளது. 

11 மாத பயிற்சியில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 01.09.2017 அன்று முதல் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 3 ஆண்டுகள் தளர்த்தப்படும். 11 மாத பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு மாத குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 மாத பயிற்சிக்கு வயது உச்ச வரம்பு மற்றும் உதவித் தொகை கிடையாது. தொழிற்சாலைகள் மூலம் பரிந்துரைக்கப்படும் பணியாட்களும் 2 மாத பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி பெறுவோருக்கு விடுதி வசதிகள் கிடையாது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், விமான நிலையம் அஞ்சல், கோயம்புத்தூர் -641014 என்ற பெயரில் 01.09.2017-க்குப்பின் தேதியிட்ட ரூ.10-க்கு குறுக்கு கோடிட்ட அஞ்சல் ஆணையுடன் ரூ.5-க்கு அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட 10 x 23 செ.மீ. உறையுடன் இணைத்து அனுப்பி விண்ணப்ப படிவத்தினை உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு 27.09.2017 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற பின்வரும் அலைபேசிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 9698449372, 9789902171, 9444166766, 9842559335

ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து படித்து பயன் பெற முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...