கோவை மாநகராட்சியில் புதிதாக குப்பை வரி மற்றும் குடிநீர் டெபாசிட் கட்டணம் விதிப்பு போன்றவை உயர்த்தப்பட்டது. இந்த புதிய வரி விதிப்புகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் , கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஓருபகுதியாக அனைத்து கட்சிகள் சார்பில் கோவை மாநகராட்சி முழுவதும் 100 வாட்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி விதித்துள்ள புதிய வரிகளை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அடுத்தகட்டமாக கோவை மாநகராட்சியை 8 கட்டமாக முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதனை தொடர்ந்து, புதிய வரி விதிப்பு முறைகளை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார். இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, டவுன்ஹால் பகுதியில் தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்பாஸ் தலைமையில் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்ட 47 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.