ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 12 பேரை தேர்வு செய்து, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய காலாண்டரரை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 3-வது ஆண்டாக விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய, 'ஐம் ஸ்பெசல்' என்ற பெயரில் 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதிலும் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வரும் 12 விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள் 'ஐம் ஸ்பெசல்' காலண்டரில் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனர் பாலாஜியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சுவர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகளான ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அனுதாபங்களை எதிர்பார்ப்பதில்லை மாறாக, எங்கள் திறமைகளுக்கு ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து எங்களை மதிப்பிடாமல் நாங்கள் யார்? என்பதனை வைத்து எங்களை மதிப்பிடுங்கள். இந்த காலண்டர் வெளீயீட்டு நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலமாக எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி' என்றார்.