பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயரை வைக்க கர்நாடகா உள்துறை அமைச்சர் முடிவு

தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான பெரியாரின் பெயர் பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த சீர்த்திருத்தவாதிகளில் பெரியாரின் பங்கு இன்றியமையாதது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுக்கையில் தமிழகத்தில் உள்ள பெண்கள் அறிவிலும், திறமையிலும் ஜொலிப்பதற்கு பெரியார் ஆற்றிய பங்கு அளப்பறியது. 

இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலமான பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். 

மேலும் திராவிட கலாச்சாரம் வளரவும், சமூக நீதிக்காகவும் பெரியார் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே நாம் இன்று பல்வேறு பலன்களை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியாரின் அடிக்கோளான மூட நம்பிக்கைகளை தடுக்கும் விதமாக கர்நாடகா அரசு சட்ட மசோதா ஒன்றையும் கொண்டுவர உள்ளதாக ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...