மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் மாநகராட்சி பீளமேடு வார்டு எண்.56 பகுதியில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் திட்டசாலை அமைக்கும் பொழுது, சாலையோர ஆக்கிரமிப்புதாரர்கள், பீளமேடு வார்டு எண்.56 கல்லூரி நகருக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி ஆக்கிரமிப்புதாரர்களை அகற்றும் பணி நடைபெற்றது. 

குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகளுக்கு உண்டான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அனைத்து தற்காலிக வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட 86 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் (சுமார் 17.20 கோடி மதிப்பு) மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களால் மீட்கப்பட்டு மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

அதேபோல், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளம், வார்டு எண்.18, கொங்கு நகர் பகுதியில் உள்ள 26.5 சென்ட் பரப்பும், கொங்கு நகர் பகுதியில் 13.3 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் வார்டு எண்.93, ராஜு நகர் பகுதியில் உள்ள 30 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 69.8 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...