ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் - தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி

தமிழக அரசின் உத்தரவின்படி, உணவு வழங்கல் துறையின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், உதகை வட்டத்தில் 31,996 ஸ்மார்ட் கார்டுகளும், குன்னூர் வட்டத்தில் 29,974 ஸ்மார்ட் கார்டுகளும், கோத்தகிரி வட்டத்தில் 18092 ஸ்மார்ட் கார்டுகளும், குந்தா வட்டத்தில் 11089 ஸ்மார்ட் கார்டுகளும், கூடலூர் வட்டத்தில் 22442 ஸ்மார்ட் கார்டுகளும், பந்தலூர் வட்டத்தில் 20554 ஸ்மார்ட் கார்டுகளும் ஆக மொத்தம் 1,34,147 ஸ்மார்ட் கார்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 72,902 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை கட்டணமாக ரூ.30 செலுத்தி திருத்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளி சுமதி கூறுகையில், நான் மடித்தொரை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது. எனவே தற்போது நான் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டாக மாற்றி தந்ததால் நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், பாமாயில், மண்ணெண்ணெய் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதையும், நியாய விலைக்கடையின் பணி நேரத்தையும் ஆகியவற்றை கைபேசிக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸின் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தினை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...