சிறப்பாக பணியாற்றிய கோவை ஆய்வாளருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கம் அறிவிப்பு



ஆண்டுதோறும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல்நிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் கணேஷுக்கு, சிறப்பாக பணியாற்றியதற்கான முதலமைச்சரின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். 

விருதுக்கு தேர்வாகியுள்ள காவல் ஆய்வாளர் கணேஷ், நீலகிரி மாவட்டம் தோவாணி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்துள்ளார். கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் உயர்கல்விப் படிப்பை முடித்த அவர்,  1989-92 ஆண்டுகளில் இயற்பியல் இளநிலை படிப்பையும், 1993-94 -ம் ஆண்டுகளில் முதுகலை படிப்பையும் முடித்தார். அதோடு, பி.எட் படிப்பை முடித்த ஆய்வாளர் கணேஷுக்கு, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 1997-ம் ஆண்டு தமிழக அரசின் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற கணேஷ், கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பந்தயசாலை, வெரைட்டிஹால் சாலை மற்றும் அத்தியாவசிய கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். 

தமிழக அரசின் விருது பெறுவது குறித்து காவல்நிலை ஆய்வாளர் கணேஷ் பேசுகையில், சிறப்பாக பணியற்றியதற்காக இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...