ரோஹிங்யா இன முஸ்லிம்கள் இனப்படுக்கொலையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்

மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுவதை கண்டித்தும் அகதிகளாக வந்துள்ளவர்களை திருப்பி அனுப்பும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் இனசுத்தகரிப்பு செய்வதை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் சஹாப்தீன் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துல் கரீம் கண்டன உரையாற்றினார். மியான்மரின் அரசு பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். 



பச்சிளம் குழந்தைகள் என பாராமல் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளை இழந்து சொந்த நாட்டை துறந்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ரோஹிங்யா இனமே அழிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஐ நா சபை மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் தொடர்ந்து இன அழிப்பு செய்துவருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. 



அகதிகளாக இந்தியா வந்துள்ளவர்களை மத்திய அரசு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது மனித நேயமற்ற செயலாகும், மத்திய அரசு அனுமதியளித்தால் இந்திய வந்துள்ள அகதிகள் அவர்கள் தங்களது சொந்த நாடு திரும்பும் வரை முழு செலவையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்க தயாராக உள்ளது. அதே போல் இன படுகொலையை கண்டித்து மத்திய அரசு உடனே மியான்மர் நாட்டுடனான தூதரக உறவை முறித்து கொள்ள வேண்டும். ஐ நா சபை உடனே தலையிட்டு அமைதி நிலவ ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறினார். 



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா ஜ க அரசு பொறுப்பேற்றதிலிருந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுவதையும் கடைசியாக கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தும், மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் முஹம்மது ரஃபீக் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...