கோவை கருமத்தம்பட்டி-யை அடுத்த சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட குளறுபடியுமே இந்த விபத்திற்கான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த சூழலில், சோமனூர் பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணியின் போது அங்கு உதவி பொறியாளராக செயல்பட்ட பரமசிவம் என்பவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரமசிவம் விருதுநகர் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.