ரூ.19.82 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் ஆம்போதி ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் இன்று (13.09.2017) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்   தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கடைகோடி கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



 

தமிழக அரசால்; அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தனிமனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதுடன் தன்னுடைய குடும்பத்தையும் முன்னேற்றம் அடையும் வகையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசால் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களை கொண்டு துறைவாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறைசார்ந்த அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொண்டு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



இன்று நடைபெறும் இம்முகாமிற்கென அன்னூர் வட்டத்திற்குட்பட்ட ஆம்போதி பகுதி பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட 109 மனுக்களில் தகுதியுடைய 52 மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 13 மனுக்கள் மேல்நடவடிக்கைகளுக்கு பரிசிலினையில் உள்ளது. 44 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இன்றைய தினம் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் அனைத்து பயனாளிகளுக்கும் உரிய நடவடிக்கையின் மூலம் தீர்வு காணப்படும். தற்போது வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்கள் தங்களின் ஊர்பகுதிகளின் அருகாமையிலேயே கூட்டுறவு சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது இ-சேவை மையம் மூலம் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற வருவாய் சான்றிதழ்களை இணைய வழியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்தஎளிய முறையினை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை இடர்பாடு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 109 பயனாளிகளுக்கு ரூ.8,93,572 இலட்சம் மதிப்பிலான காசோலையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்; பழங்குடியினர் நல அலுவலத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.20,700 மதிப்பிலான தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது. 

வேளாண் துறையின் மூலம் 4 விவசாயிகளுக்கு ரூ.400 மதிப்பில் எள் விதை, தோட்டக்கலைத்துறையின் மூலம் உயர்ரக காய்கறி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.20,000மும், வேளாண் பொறியியல்துறையின் மூலம் நீடித்த மானவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் மூலம் குப்பனூர் விவசாயி சங்கத்திற்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் டிராக்டரும், வேளாண் இயற்திர மயமாக்குதளுக்கான துணை இயக்தத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1.76 இலட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களும் என மொத்தம், 123 பயனாளிகளுக்கு ரூ.19,82 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார். 



முன்னதாக, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். 

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சின்னசாமி, மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், இணை இயக்குநர் (வேளாண்மை) பெருமாள், இணை இயக்குநர் (கால்நடைபராமரிப்புத்துறை) சந்திரசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வசந்தாதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .செந்திவேல் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...