சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தில் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் அட்டையில், மூதாட்டியின் புகைப்படத்திற்கு பதிலாக, பிரபல நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறாக இருக்கலாம். இ-சேவை மையத்தில் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டுக் கொள்ளலாம் என கூறி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நடிகையின் படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.