முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலர் அந்தஸ்துக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மைய முப்படைவீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரதப்பிரதமரின் கல்வி உதவித்தொகையினைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு மேல்பெற்று தேர்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை www.ksb.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2017 ஆகும்.

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்தோர்களின் வாரிசுகள் இக்கல்வி நிதியுதவியினைப் பெற குறித்த காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...