கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் குறிப்பாக நல்லூர்வயல், மத்துவராயபுரம், ஆலாந்துறை, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சின்னவெங்காயம் சாகுபடி செய்வது வழக்கம்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னவெங்காயம் மற்றும் வாழைமரங்கள் நடவுசெய்யப்பட்ட நிலையில் தற்பாது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சாகுபடி நேரத்தில் பெய்து வரும் இந்த மழையினால் பெரும்பாலான வெங்காயம் மற்றும் வாழைகள் நாசமாகி வருகின்றன.
சின்ன வெங்காயம், ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் பயிர் சாகுபடி செய்த நிலையில் தற்போது சொற்ப ரூபாயே கிடைக்கப்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள பயிர்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது நஷ்டஈடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். வாழை மர விவசாயிகளுக்கு ரூ.3.5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சக்கத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.