நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிச் சான்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர் தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நவோதயா பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாகவும், 11,12 ஆம் வகுப்பில் தமிழ் கூடுதல் பாடமாக இருப்பதாகவும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 வகுப்புகளில் கூடுதல் பாடமாக கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும்  என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு,

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

இது தமிழக அரசின் இரு மொழிக்கொள்கையை மீறும் விதத்தில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என தெரிவித்தனர். 

இதனிடையே, ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தற்காலிக கட்டிடத்தில் பள்ளி இயங்கலாம் என விதியிருப்பதை புதுவை நவோதயா பள்ளி முதல்வர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாயை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 8 வாரத்தில் தடையில்லா சான்று வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...