கோவை மாவட்டம் தீத்திபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர், காளம்பாளையம் ஒருங்கிணைந்த காலனிகள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு நீர் வழங்கப்படுவதில்லை. இது குறித்து தீத்திபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முறையான குடிநீர் விநியோகம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.