கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் மதநல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை. நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்திரவினை மறுபரீசிலணை செய்ய வேண்டும். அமைதி வழியான போராட்டங்கள் நடத்தக்கூட தமிழக அரசு அனுமதிப்பதில்லை. மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை உச்சநீதிமன்றமே தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி விட்டு மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைப்பது அநீதி.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 24 மணி நேரமும் பதவியில் இருப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மக்கள் நலனை பேணும் அரசு அமைய இந்த அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.