கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் சுடர் குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கான சிறப்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி பர்ஹானா ரியாஸ் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட தங்ககிளி, பாகியமேரி, மாணவி. இலாவண்யா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் பல்சமய பிரார்த்தனை செய்தனர். சாந்தி ஆஸ்ரமம் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார்.

பின்னர், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவுப் பொருட்களை அஸ்வதி அறகட்டளை சேர்ந்த சந்திரா வழங்கினார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஜுவைரியா குழுவினர் குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்தி பரிசளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பிற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ரேணுகா தேவி குழுவினர் வழங்கினர். பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள், கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வத் தொண்டர்களாகவும் கலந்து கொண்டனர்.
