சோமனூர் கட்டிட விபத்திற்கான காரணம்..! : ஊழலால் வீழ்ந்ததா பேருந்து நிலையம்?

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். தரமற்ற கட்டிடம் கட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என்றும், மக்களின் நலனி அக்கறை கொண்டு தரமான கட்டிடம் கட்டியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. 

தரமான கட்டிட வழிமுறை 

இந்த நிலையில், இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது குறித்து கட்டிட தரத்தை ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவர் கூறியதாவது :- பொதுவாக கட்டிடம் ஒன்றை கட்டும் முன்னர், சிமெண்டு, மணல், மற்றும் ஜல்லியின் தரத்தை சரி பார்க்க வேண்டும். மணல் மற்றும் ஜல்லியின் தரத்தை உறுதி செய்ய 2 நாட்கள் அவகாசம் தேவைப்படும்.

சிமெண்டின் தரத்தை சரி பார்க்க குறைந்தது 7 முதல் 28 நாட்கள் ஆகும். இவ்வாறு முழுமையான சோதனையின் பின்னர், கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அறிக்கை சம்பந்தபட்ட கட்டிட உரிமையாளர்கள் அல்லது பொறியாளர்களுக்கு  அனுப்பப்படும். இவ்வாறு கட்டப்படும் கட்டிடமே தரமானவையாக இருக்கும்.

கட்டுமான பணியின் போது, தரமான கட்டிடம் ஒன்றை கட்டி முடிப்பது முதல், கட்டிடத்தின் மீது கான்கிரீட் அமைப்பது வரை கட்டுமான பொருட்களின் கலவை விகிதம் என்பது மிக முக்கியம்.

(3:1) கலவை முறை 

தற்போது, சந்தையில் மூன்று விதமான தரங்களில் சிமெண்டுகள் கிடைக்கின்றது. அப்படி, எந்த தரத்தில் வாங்கினாலும், அதை 3 சட்டி மணலுக்கு 1 சட்டி சிமெண்ட் (3:1) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும், அதனோடு 5 முதல் 7 சட்டி ஜல்லி கற்களை போடவேண்டும். இது, ஒரு தரமான கான்கிரீட் அமைக்க தேவையான கலவை முறை.

தற்போது வெளியான வீடியோவில், கான்கிரீட் பொரிந்து விழுகிறது. கட்டப்பட்டு 40 வருடங்களுக்கு மேலான கான்கிரீட் சுவர் தான் இப்படி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் கான்கிரீட் இப்படி பொரிந்து விழுமானால், அங்கு ஊழல் நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஊழலால் ஆன கட்டிடம்

ஏறத்தாழ 8 சட்டி மணலுக்கு ஒரு சட்டி சிமெண்ட் (8:1) என்ற விகிதத்தில் இந்த கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போல, கான்கிரீட்டுடன் மேற்கூரையில் ‘தளம்’ தரமானதாக அமைக்காமல் இருந்திருக்க வேண்டும். இந்த காரணங்கள்  தான் கட்டிடம் இடிந்து விழுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும்.

அதிக அளவு மணலை உபயோகித்து, குறைவான சிமெண்ட்டை உபயோகிக்கும் போது பணம் மிச்சமாகிறது. ஆனால், கட்டிடத்தின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது. கான்கிரீட் கூரையின் மேல்பக்கத் தளம் தரமாக அமைக்க வேண்டும். சிமெண்ட்டை மிச்சப்படுத்த நினைக்கும் போது, மழை நீர் உள்ளே தேங்கி கான்க்ரீட் கம்பிகள் வலுவிழந்து போகும்.

தற்போது சோமனூரில் நடைபெற்ற விபத்துக்கு இவ்விரு காரணங்களே முக்கிய காரணியாக இருக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...