திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் என்.நாச்சிமுத்து. தனது மகள் இந்துவுடன் வசித்துவந்தார். என்.நாச்சிமுத்து அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதியன்று இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அருகே வந்த வாகனம் வேகமாக மோதியதில் என்.நாச்சிமுத்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மகள் இந்து, அவரது அப்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் மற்றும் எலும்பு கங்கா மருத்துவ மனைக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய என்.நாச்சிமுத்து குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.