ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளுநரை சந்தித்தார் டிடிவி தினகரன் - முதலமைச்சரை மாற்றக் கோரிக்கை.

தினகரன் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால், அதன் மீது ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஆதரவை திரும்பப் பெற்ற எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 18 பேர் புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புதுச்சேரி சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே, மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்தனர். இடைப்பட்ட காலத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர். 

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று (செப்.,7) ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். ஆளுநர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காரில் சென்னை அழைத்து வரப்பட்டனர். 

சென்னையில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவர்கள், ஆளுநரை சந்திப்பதற்காக புறப்பட்டனர். 12.45 மணியளவில் தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆளுநரை சந்தித்தனர். அப்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை விளக்கியதுடன், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...