நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

மதுரையை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரது மனைவி சபரிமாலா (34). இவர், திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஊராட்சி. ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது ஏழு வயது மகன் ஜெயசோழனையும், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.,6) பள்ளிக்கு வந்த ஆசிரியை சபரிமாலா, பணியை புறக்கணித்து விட்டு, தனது மகன் ஜெயசோழனுடன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்தக் கோரியும், பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன் ஆசிரியை நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 



அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வெள்ளிமேடுபேட்டை போலீசார், போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதை ஏற்று சபரிமாலா தனது போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், இன்று (செப்.,7) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனை சந்தித்த சபரிமாலா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும் வழங்கினார். 

பணியை ராஜினாமா செய்தது குறித்து சபரிமலா கூறுகையில், "அரசு பணியில் இருப்பதால் சமூக பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால், பதவியை ராஜினாமா செய்தேன். கிராமந்தோறும் சென்று படிக்காத இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...