கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா மென் தமிழ்சொல்லாளர் என்ற தமிழ் மென்பொருள் திட்ட செயலாக்க கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் அன்புச் செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தலைமை செயலக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ந.அருள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.