சிறந்து விளங்கும் தனியார் வங்கிக்கான விருதை பெற்றது லட்சுமி விலாஷ் வங்கி

விவசாயக் கடன், சிறு,குறு தொழில்களுக்கான கடன்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று, சிறந்து விளங்கிய தனியார் வங்கிளுக்கான விருது (Dun & Bradstreet - Banking Awards 2017)  கோவையில் வழங்கப்பட்டது. 

இந்த விருதை, லட்சுமி விலாஷ் வங்கி தட்டிச் சென்றது. அதன் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் விருதை பெற்றுக் கொண்டார்.  சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன் வழங்குவதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால், லட்சுமி விலாஷ் வங்கி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

அதாவது, ரூ.5,700 கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களை வழங்கியுள்ளது. 2020 -ம் ஆண்டுக்குள் இந்தக் கடன் தொகையின் அளவை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதே இலக்கு என லட்சுமி விலாஷ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

அண்மையில், முதல் முறையாக லட்சுமி விலாஷ் வங்கியின், வணிக கிளை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருது வாங்கியது தொடர்பாக லட்சுமி விலாஷ் வங்கியின் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் பேசுகையில், சிறந்த வங்கிக்கான விருதை பெற்றதன் மூலமாக மதிப்புமிக்க அங்கீகாரத்தை லட்சுமி விலாஷ் வங்கி பெற்றது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை அதிகரிப்பது தொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...