நீட் தேர்வைக் கண்டித்து வால்பாறை பாரதியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசுமே காரணம். மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...