கோவையில் பெய்த கனமழையால் நீரில் மிதக்கும் வீடுகள் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது.

இந்நிலையில், சுங்கம் அருகே உள்ள கல்லுக்குழி பகுதி, நேற்று பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீட்டின் பாதி சுவர் அளவுக்கு நீர் தேங்கி கிடப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.



இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும் போது, தனது தந்தை உடல்நலக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது, மருத்துவ பரிசோதனை குறிப்புகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டன. இதனால், தனது தந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வேதனையுடன் அவர் கூறினார். 

ஒவ்வொறு ஆண்டும் பெய்யும் கனமழையால், வீடுகள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே செல்வதாகவும்,  குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறுஇடத்தில் வீடு கட்டித் தருவதாக அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகளும் வாடிக்கையாகி விட்டதாக கல்லுக்குழி பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



எனவே, தற்போது தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு இந்த பகுதியில் 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...