ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி : 32 பேர் படுகாயம்



உடுமலை அருகே ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வேன் மூலம் பயணித்தனர்.

வேன்-ஐ திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில், வேன் உடுமலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆமினி பேருந்தின் மீது மோதியது. 



இந்த விபத்தில் ஓட்டுனர் ஜீவானந்தம் உட்பட வேனில் இருந்த ரங்கராஜ் (40), காமாட்சி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், ஆமினி பேருந்து மற்றும் வேனில் பயணித்த 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மற்றவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...