மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில், மாணவி அனிதாவுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என தெரியவில்லை என்று கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.