நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் முழுவதும்ம த்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் பொறுப்பாளர் முத்துச்சாமி மற்றும் இளைஞரணி தலைவர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. வடகோவையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி சிவானந்தா காலனியில் முடிவடைந்தது.

இறுதியில், சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகே மாணவி அனிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர். மாணவியின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்றும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்,
தி.மு.க.வின் சார்பில் நடந்த இந்தப் பேரணியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.