தியாகத்தை போற்றும் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை

இறைவனின் தூதரான இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அரபி மாதம் துல்ஹஜ் 10-ம் பிறை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர் இஸ்லாமியர்கள். 



பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்துவர். தொழுகை முடிந்த பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். பின்னர் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு குர்பானி கொடுக்கப்படுகிறது. குர்பானிக்காக பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தச்சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகிறது. எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்.



பக்ரீத் தியாகப் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணமானவர் இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் நபி இப்ராஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து நபி இப்ராஹீம் மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் வாரிசாக அளித்தார். 

இதன்பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது. இஸ்மாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரபியர்கள். இஸ்மாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு இறைவன், இப்ராஹீம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தார். 

அப்பொழுது, ஜிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டான். அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன்!

மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத் திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். 



உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிளேயே நடத்தப்படுகின்றன. பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...