கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.08.2017) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி புதிய இந்தியா உறுதிமொழியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். அருகில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) சந்திரசேகர் உட்பட பலர் உள்ளனர்.

