மின்கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் கறவை மாடு பலி

கோவை மாவட்டம், பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன், செல்வி. ஒரு கறவை மாட்டினைக் கொண்டு அதன் மூலம் பெறப்படும் பாலினை விநியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.



இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.  

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...