காவல் துறையினர்களுக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு அரங்கில் துவக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறையினர்களுக்கான 57-வது தடகள போட்டி இன்று துவங்கியது. வரும் புதன் கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை நேருவிளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான 57-வது தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த தடகள போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.

இந்த தடகள போட்டிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில், ஆயுதப்படை, அதிரடிப் படை, சென்னை பெருநகரம், வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். 

ஆண் காவலர்களுக்கு 23 வகையான தடகள போட்டி, பெண் காவலர்களுக்கு 19 வகையான தடகள போட்டிகள், மூத்த காவல் துறையினருக்கு தனியாக தடகள போட்டிகள் என மொத்தம் 60 தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றது.

தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் ஆயுதப் படை அணியினர் 17 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மத்திய மண்டலம் 11 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...