கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கிய டி.டி.வி.தினகரன்-யின் கொடும்பாவி எரிப்பு

அதிமுக-வில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை அக்கட்சியின் துணை பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டு தற்போது நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார்.

ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து இன்று டி.டி.வி.தினகரன் நீக்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி.தினரனின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் திரண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...