வால்பாறை கருமலை ௭ஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், வேலுசாமி ௭ன்னும் தோட்ட தொழிலாளி, அந்த காட்டு யானை தாக்கியதில் ௨யிரிழந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர்.

40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலையில், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மாறியலில் ஈடுபட்ட மக்களால் அச்சாலை வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அந்த காட்டு யானையை பிடிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.