கோவையில் மக்கிய பொருட்களிலிருந்து மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பட்டறை

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியை பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் இல்லாத நகரமாக்குவதற்காக கோவை மாநகராட்சி சார்பாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவையில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் புதிய முறைகள் மூலம் தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்ற வழக்கமான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது குறைக்கப்படும். உற்பத்தியாளர்கள் தங்களிடம் தற்போதுள்ள இயந்திரங்கள் மூலமாக மக்கும் பைகள் தயாரிப்பதற்கான தேவையான பயிற்;சிகள் அளிக்கப்படும். இந்த புதிய முறையை பயன்படுத்துவது மூலம் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மக்கும் பைகளை குறைந்த விலையில் தயாரித்துக்கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தகவல் தெரிந்துகொள்வதற்கு எஸ்.சீனிவாசன் அவர்களை 9994859966 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் [email protected] மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

முதலில் வரும் 100 உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும். கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடடின் இந்த புதிய முயற்சியில் கோவை உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...