வால்பாறையை அடுத்துள்ள மஹாவீரன் பிளாண்டேனுக்கு சொந்தமான ஹைபாரஸ்ட் மற்றும் வாகமலை ஆகிய இரண்டு தேயிலை தோட்டங்கள் உள்ளது. இதில் சுமார் 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம், வருங்கால வைப்புநிதி, போனஸ் ஆகியவை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு எட்டவில்லை.
இந்நிலையில், யூனியன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு குன்னூரை தலைமையிடாக கொண்ட இந்திய தேயிலை வாரிய செயல் அதிகாரி பால்ராஜ் ஐ.ஏ.எஸ். தலைமையில் உதவி தேயிலை வாரிய அதிகாரிகளான ஹரிபிரியா, ஜார்ஜ் சாமுவேல், வால்பாறை தேயிலை தோட்ட ஆய்வாளர் முகமது யூசப் மற்றும் வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் நேரடியாக ஆய்வு செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி, ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு சலுகை, வீட்டு மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து தர வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு விரைவில் மேற்கூறிய சலுகைகள் உடனடியாக செய்து தர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு குறைகள் இக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து மஹாவீர் பிளாண்டேன் உரிமையாளர் டி.பன்சலி கூறுகையில், மேற்குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் 15 நாட்களில் தீர்க்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது தொழிற்சங்க தலைவர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.