ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து



கோவை, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசியிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை, கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலை கற்பகம் கல்லூரி அருகே வரும் போது, கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கருமத்தம்ப்பட்டி நோக்கி வந்த லாரி ஒன்று சொகுசு பேருந்தின் பின் புறத்தில் மோதியதாக தெரிகிறது. 

இந்த விபத்தில், சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஒரு சில பயணிகள் வெளியே வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் உட்பட குருவம்மா, பெரியசாமி, வத்சலா, சசிதரன், பாலகுரு, பொன்னுச்சாமி ஆகியோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். 



இதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லின் இயந்திரத்தின் உதவியோடு பேருந்தை மீட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடந்த ஓட்டுநர் மாரியப்பன், பெண் பயணி குருவம்மா மற்றும் லாரி ஓட்டுநர் அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



விபத்து குறித்து மதுக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் கட்டாததால் தான் அதிகளவு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...