முன்னாள் விஞ்ஞானி பெயர் சூடப்பட்ட "புதிய தவளை" இனம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் புதிய ஊதா தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு சலீம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பூபதி என்னும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பூபதி, அகஸ்திய மலையில் இதுகுறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தவளை மற்றும் ஆம்ஃபிபியன்ஸ் பிரிவு குறித்தான பத்திரிகையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஊதா வகை தவளை இனத்தை கண்டறிந்தவர் ஜனனி என்றும், அதனை ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு நீர்நிலையில் கண்டறிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.



பூபதி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை தவளை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றும், மேலும், இந்த தவளை இனத்தின் தங்கையாக என்.சாஹயாட்ரென்சிஸ் வகை உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்த இரு தவளை இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உடலளவிலும், வடிவமைப்பினைக் கொண்டும் அடையாளம் காணப்படுகிறது. அறிதாக காணப்பட்டுள்ள இந்த தவளை இனத்தினை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு ஈரப்பதம் நிறைந்த நீர்நிலை அருகில் விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவளை எந்தெந்த பகுதியில் உள்ளனவென்றும், எவ்வளவு எண்ணிக்கையில் இது உள்ளது என்றும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களிலேயே இது குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

என்.பூபதி என்னும் இந்த தவளை இனத்தை நீர்நிலைகள் நிறைந்த வனப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏனெனில், இத்தவளை வனப்பகுதியினை விட்டு பொதுமக்கள், மலைத்தொடர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதையில் குறிக்கிடும் போது இதற்கு இடர்பாடுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.



மேலும், பக்தர்கள், பொதுமக்கள் மூலம் சமீபகாலமாக நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட நீர்நிலைகளின் அருகிலேயே இதனை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இதுகுறித்து வெளியான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...