ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம்



கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா இன்று காலை முதல் மாலை வரை அப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பீளமேடு காவல் நிலையத்தின் காவல் ஆணையர் செல்வராஜ்  கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.  பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார். பின்னர், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டிப் போட்டிற்கான தீப ஒளி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் அப்பள்ளியில் வளாகத்தில் பள்ளியின் ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆய்வாளர் ஆர்.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, பெற்றோர்கள் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மட்டும் கூறாமல், கூடுதல் செயல்திட்ட நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்றார். அப்போதுதான் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறை மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் அடைவார்கள் அதன் மூலம் வாழ்வில் முழு வெற்றி பெறுவார்கள் என்றார்.



பின்னர், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, காலை முதல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100மீட்டர் தொடர் ஓட்டப்பந்தையம், 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென ஓட்டப்பந்தயம், கைப்பந்துப் போட்டி, எறிபந்துப் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி கோப்பைகள் வழங்கினார்.



நிகழ்ச்சியின் இறுதியில், பள்ளி மாணவர்களின் நடனம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கண்களை கவர்ந்தது. முன்னதாக, அப்பள்ளியின் முதல்வர் ராம்தாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.  விழாவில், கல்லூரி செயலாளர் விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...